thiru-paavai

பாசுரம் 1 : மார்கழி திங்கள்

*திருப்பாவை பாசுரம் 1*

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.
நேர் இழையீர் – அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே; பறை – விருப்பம்;
ஏல் – கேள்; ஓர் – இதை நினைப்பாயாக; ஏலோர் – பாதத்தை நிறைத்து கிடக்கும் சொல்;
எம்பாவாய் – எம்முடைய பாவையே – காமன்(மன்மதன்) மனைவி ரதி என்றும் கொள்ளலாம்.
“மேல் காமனை நோற்கையாலே அவன் மனைவியான ரதியை சொல்லியதாகவும் ஆகும்”

*Pasuram 1 – In English*
It’s Margali month, moon replete and the day is proper
We shall bathe, girls of Ayarpadi prosperous
Will you move out? You wealthy adorn’d fine jewels;
Narayana, son of relentless Nandagopala,
Whose job wielding a sharp spike ever alert and
The lion cub of Yasoda with eye gracious
And the lad with dark complexion, handsome eye
And face sunny bright pleasant as moon
Sure shall grant us the desire soon
To the esteem of this earth as a boon;
Oblige, involve, listen and consider, our damsel.

Lohith Ashwa

Lohith Ashwa was born on April 6, 2011. I am a school boy studying in 8th grade in Modern senior secondary school. I like Nanganallur so, I do this to the place i like.